சமீபத்திய நிகழ்வுகள்

இதுவரை ‘உதவுங்கரங்கள்’ செய்த உதவிகள் 

கல்விசார் உதவிகள்

சுயதொழிலுக்கான உதவிகள்

கல்விசார் உதவிகள்:

======================

28/01/2021:

---------------------

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் 5 மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5,000 ரூபாய்கள் பெறுமதியான பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பள்ளிக் காலணிகள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. இதற்கான பணம் பொதுநிதியில் இருந்து எடுக்கப்பட்டது.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் 4 மாணவர்களுக்குத் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. இதற்கான நிதியை இரவி தம்பையா தந்து உதவினார்.

16/03/2021:

--------------------

 4 முல்லைத்தீவு மாணவர்களுக்குத் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. இதற்கான நிதியைத் தந்து உதவியவர்கள் ஶ்ரீஅருள்நாதன், நோர்வேயில் வசிக்கும் அவருடைய சகோதரி, பிரதாபன் மற்றும் விஜயராஜா ஆகியோர்.


5 முல்லைத்தீவு மாணவர்களுக்கு அவர்கள் கல்விப் பொதுத்தராதர சாதாரண மற்றும் உயர்தர தரங்களில் தோற்றுவதற்காக 2021 பங்குனி மாதம் முதல் அவர்களுடைய தனியார் கல்விக் கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன. இதற்கான பணம், மாதமொன்றுக்கு 5,400 ரூபாய்கள், பொதுநிதியில் இருந்து எடுக்கப்படுகின்றது.


02/04/2021:

---------------------

முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது உடுத்துறையில் வசிக்கும் மாணவி ஒருவருக்குத் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது. இதற்கான நிதியை புவனச்சந்திரன் ஆசிரியர் தந்து உதவினார்.


29/04/2021:

---------------------

மாமூலையில் வசிக்கும் மாணவி ஒருவருக்குத் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது. இதற்கான நிதியை உமாசுதன் தந்து உதவினார்.


அம்மாணவிக்கு 5,000 ரூபாய்கள் தனியார் கல்விக் கட்டணம் செலுத்தவும் இன்னொரு 5,000 ரூபாய்கள் கற்றல் உபகரணங்கள் வாங்கவும் கொடுக்கப்பட்டன. இதற்கான நிதியை இரமணீகரன் தந்து உதவினார்.


29/04/2021

--------------------

பல்கலை செல்லும் மூதூர் மாணவனின் தேவைகளுக்கு 15,000 ரூபாய்கள் வழங்கப் பட்டது. இதற்கான நிதியை இரவி சுப்பிரமணியம் தந்து உதவினார்.


சுயதொழிலுக்கான உதவிகள்:

=======================

30/03/2021:

--------------------

முல்லைத்தீவு பயனளிக்குக் கோழிக்கூடு, முழுச்செலவும் + 50 கோழிகள் + 3 மாதங்களுக்குத் தேவையான தீவனங்கள் மேலதிகமாக 15000 ரூபாய்கள் வழங்கப்பட்டன. இதற்கான முழுநிதியை ஜோசுவா தந்து உதவினார்.


06/05/2021:

--------------------

உருத்திரபுர பயனாளிக்குக் கோழிக்கூடு அமைக்க, 100,000 ரூபாய்கள் + 50 கோழிகள் + 3 மாதங்களுக்குத் தேவையான தீவனங்கள் வழங்கப்பட்டன. இதற்கான முழுநிதியை ஒட்டாவா பாலா தந்து உதவினார்.


18/05/2121:

---------------------

துணுக்காய் பயனாளிக்குக் கோழிக்கூடு அமைக்க, 100,000 ரூபாய்கள் + 50 கோழிகள் + 3 மாதங்களுக்குத் தேவையான தீவனங்கள் வழங்கப்பட்டன. இதற்கான முழுநிதியை இரவி சுப்பிரமணியம் தந்து உதவினார்.


👆மேலே செய்யப்பட்ட உதவிகள் அனைத்தும் உங்கள் அனைவரின் பங்களிப்பினால் மட்டுமே சாத்தியமாகின. குறிப்பாக சுயதொழிலுக்கு உதவியவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகளுக்கு உதவியவர்களுக்கும் விசேட நன்றிகள். இதைவிடப் பின்னணியில் இன்னும் பலரின் கடும் உழைப்பும் அடங்கி இருக்கின்றன. குறிப்பாகக் களப்பணி ஆற்றிய சிவபாலா, பானுமதி, ஸ்ரீதேவி மற்றும் ஜனார்த்தனகுமாரி ஆகியோருக்கு நன்றிகள் பல.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

ஊர் கூடித் தேர் இழுப்போம்

அறம் செய்ய விரும்புவோம்

ஈவது விலக்கேல் என்பதைக் கடைப் பிடிப்போம்.

நன்றி 🙏